Publish Date: Mon, 09 Feb 2009 (12:00 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (11:59 IST)
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அடல் பிகாரி வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைக்கும் அளவிற்கு அவரது உடல்நிலை தேறியுள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் டி.கே. சர்மா தனது மருத்துவக் குறிப்பில் கூறியுள்ளார்.
தற்போது 84 வயதாகும் முன்னால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த வாரம் செவ்வாய்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Webdunia
Publish Date: Mon, 09 Feb 2009 (12:00 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (11:59 IST)