Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாத ஆதரவு நாடுகளுக்கு பதிலடி - சோனியா

பயங்கரவாத ஆதரவு நாடுகளுக்கு பதிலடி - சோனியா
, ஞாயிறு, 8 பிப்ரவரி 2009 (15:08 IST)
புதுடெல்லி: மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் எந்த அமைப்பின் மீதும் நடவடிக்கை எடுக்காததற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு இந்தியா தக்க பதிலடியைக் கொடுக்கும் என்றும் அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார தொடக்கமாக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களின் மாநாட்டை புதுடெல்லியில் இன்று தொடங்கி வைத்துப் பேசிய சோனியா காந்தி, பயங்கரவாதம் என்பது ஒரு மிகப்பெரிய சவால் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியா உரிய வகையில் பதிலடி கொடுக்கும் என்றும் கூறினார்.

இந்தியாவின் அமைதியை பலவீனமாக அண்டை நாடுகள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்த அவர், பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.

பயங்கரவாதத்தை எவ்வித பாகுபாடும் இல்லாமல் தொடர்ந்து மத்திய அரசு முறியடிக்கும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைப் போல் அல்லாமல், பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் தேர்தல் பலனாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சிறப்பான வகையில் நாடு செயல்படுவதாகவும் சோனியா பாராட்டு தெரிவித்தார்.

எந்தவொரு மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை என்றார் சோனியா.

Share this Story:

Follow Webdunia tamil