Publish Date: Sat, 07 Feb 2009 (11:29 IST)
Updated Date: Sat, 07 Feb 2009 (11:28 IST)
சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
வாஜ்பாய் உடல்நிலை, இருதயத் துடிப்பு ஆகியவை சீராக இருந்தாலும், சுவாசக் கோளாறு காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதால் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சம்பத் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சுவாசப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாகவே அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும் அவரது பிற உறுப்புகளின் செயல்பாடுகள் இயல்பு நிலையிலேயே உள்ளன. அவரது உடல்நலம் முற்றிலுமாக சீராவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 3ஆம் தேதி இரவு புதுடெல்லி இந்திய அறிவியல் ஆராய்ச்சி மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் ஓரளவு உடல்நலம் தேறிய வாஜ்பாய்க்கு நேற்று மாலை மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
Webdunia
Publish Date: Sat, 07 Feb 2009 (11:29 IST)
Updated Date: Sat, 07 Feb 2009 (11:28 IST)