Publish Date: Sat, 07 Feb 2009 (11:05 IST)Updated Date: Sat, 07 Feb 2009 (11:04 IST)
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான காங்கிரஸ் சந்தேஷ் பத்திரிகையில் சோனியா கூறியுள்ளதாவது:
கட்சிக்கும், நாட்டிற்கும் அவர் (மன்மோகன்) பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார். எதிர்காலத்திலும் அவரது சேவையும், தலைமையும் தொடர்ந்து நீடிக்க வேண்டும். குறிப்பாக தனது செயல்பாடுகள் மூலம் இளைய சமுதாயத்தினருக்கு அவர் ஊக்கமளிக்க வேண்டும்.
விவேகம், புத்திசாலித்தனம், எளிமை, மனிதநேயம் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் மன்மோகன் சிங்கின் தலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் சோனியா விருப்பம் தெரிவித்துள்ளார்.
சோனியாவின் இந்தக் கருத்துகள் மூலம் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.