''இலங்கையில் அப்பாவி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத அளவுக்கு கடினமான சூழ்நிலை நிலவுகிறது'' என்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டையில் அப்பாவி பொதுமக்கள் பலியாவது கவலை அளிக்கிறது என்றார்.
பாதுகாப்பு பகுதிக்குள் அப்பாவி பொதுமக்கள் செல்ல விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொள்கிறது என்று கூறிய பிரணாப், பாதுகாப்பு பகுதியில் குண்டு வீச மாட்டோம் என்று இந்தியாவிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்து இருக்கிறார் என்றார்.
அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத அளவுக்கு கடினமான சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் பாதுகாப்பு பகுதிக்குள் வர வேண்டும். 1987-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் 13-வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக, ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.