இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இனப் படுகொலையை கண்டிப்பதாக இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் வாழும் 25 இலட்சம் தமிழர்களை குறிவைத்து ஒவ்வொரு நாளும் சிறிலங்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது எனவும், பெண்கள், குழந்தைகள் என்று யாரையும் விட்டு வைக்காமல் அந்த இனப் படுகொலை நடந்து வருகிறது எனவும், அதனை இந்திய அரசும், ஐ.நா.வும் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கூறியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள தமிழக வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அத்தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.