பாரதிய ஜனதா தலைமையிலான தேச ஜனநாயக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் என்ன விலைக் கொடுத்தாவது பயங்கரவாதத்தை தடுக்கும் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ஆந்திரப் பிரதேசத்திற்கு வந்துள்ள அத்வானி, விஜயவாடாவில் செய்தியாளர்களிடன் பேசுகையில், ஆட்சிக்கு வந்ததும் தேச ஜனநாயக கூட்டணி அரசு பயங்கரவாதிகளின் ஆபத்தன திட்டங்களை கண்டுபிடித்து தடுத்து நாட்டைக் காக்கும் என்று கூறினார்.
இந்தியாவையும் நெருக்கிவரும் உலகளாவிய பொருளாதார பின்னடைவால் நமது நாட்டை அச்சுறுத்திவரும் வேலை வாய்ப்பு இழப்பு அபாயத்தைத் தடுக்க, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து அதில் முதலீடு செய்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய அத்வானி, இதனைச் செய்யத் தவறினால் அமைப்பு சாரா துறைகளில் பெரும் அளவிற்கு வேலையின்மை ஏற்படும் என்று கூறினார்.