Publish Date: Wed, 04 Feb 2009 (19:52 IST)
Updated Date: Wed, 04 Feb 2009 (19:51 IST)
நமது நாட்டை பலவீனப்படுத்த முற்படும் பயங்கரவாதம் உள்ளிட்ட சக்திகளுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்றும், இந்த எண்ணத்துடன் உள்ள சில அண்டை நாடுகளின் (பாகிஸ்தான்) நோக்கம் நிறைவேறாது என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பல்வேறு மதத்தினரும், சாதியினரும் ஒன்றுபட்டு நல்லிணக்கத்துடன் வாழ்வதுதான் உலக அரங்கில் இந்தியாவிற்கு உள்ள தனித்த அடையாளம் ஆகும். நமது வலிமையைக் குலைத்து, ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் தகர்க்க சில அண்டை நாடுகள் திட்டமிடுகின்றன. அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க நம்மால் முடியும் என்பதை அவ்ரகள் உணரவில்லை என்றார்.
நமக்கு முக்கியச் சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தை நாம் நிச்சயமாக முறியடிப்போம். நமது நாட்டை பலவீனப்படுத்த முற்படும் பயங்கரவாதம் உள்ளிட்ட சக்திகளுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.