Publish Date: Wed, 04 Feb 2009 (16:52 IST)
Updated Date: Wed, 04 Feb 2009 (16:52 IST)
அகமதாபாத்தில் 57 உயிர்களைப் பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக மேலும் 5 குற்றப்பத்திரிகைகளை நகரக் காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஒவ்வாரு குற்றப்பத்திரிகையும் 1,000 பக்கங்களுக்கும் மேற்பட்டவை என்றும், இந்தியன் முஜாஹிதீன் மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) ஆகியவைதான் இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்றும் அவை குற்றம்சாற்றுகின்றன என்று குற்றப்பிரிவு காவலர்கள் தெரிவித்தனர்.
அகமதாபாத் பயங்கரவாதத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டனர் என்பதை இந்தக் குற்றப்பத்திரிகைகள் விரிவாக தெரிவிக்கின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குஜராத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து, அகமதாபாத் தாக்குதலிற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.