கேரள மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுப்பதற்காக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி, மார்க்சிஸ்ட் கட்சியைச் செர்ந்த பி. ராஜீவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கேரள சட்டசபையில் இந்தக் கட்சிகளுக்கு உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வயலார் ரவி உட்பட 3 பேரும் போட்டியின்றி மக்களவைக்குத் தேர்வு செய்யப்படுவது உறுதி என்று தெரிய வந்துள்ளது.
வயலார் ரவி ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் அவர் எம்.பி.யாக்கப்படுகிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டிருப்பவர்கள் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள சட்டப்பேரவை செயலாளர் பி.டி. ராஜனிடம் வயலார் ரவி உள்ளிட்ட மூவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.