ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை இராணுவத்தினர் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி போஙககுவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது என்று பனிஹால் காவல்துறை ஆய்வாளர் நசீர் தார் தெரிவித்தார்.
வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதை அடுத்து போக்குவரத்து மீண்டும் சீர் செய்யப்பட்டது.
வெடிபொருட்கள் பறிமுதல்
இதேபோல, கிஸ்த்வார் மாவட்டத்தில் மலைக்குகை ஒன்றில் தீவிரவாதிகள் அமைத்திருந்த மறைவிடத்தைக் கண்டுபிடித்த இராணுவத்தினர் அதிலிருந்து இயந்திரத் துப்பாக்கி உட்பட ஏராளமான வெடிபொருட்களைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.
குச்சால் பகுதியில் இந்தக் குகை அமைந்துள்ளதாகவும், அங்கு கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.