Publish Date: Mon, 02 Feb 2009 (20:14 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (20:14 IST)
பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதி பிரச்சனைகளுடன் காஷ்மீர் விவகாரத்தை சம்பந்தப்படுத்துவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் இந்தியா கடுமையாக எதிர்க்கிறது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு தேசப் பாதுகாப்புச் செயலர் எம்.கே. நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிபராகப் பதவியேற்பதற்கு முன்பு பாகிஸ்தானில் பிரச்சாரத்தில் பேசிய ஒபாமா, பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கும் காஷ்மீர் விவகாரத்தையும் ஒரே விதத்தில் தீர்ப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து கரன் தாப்பரின் 'இந்தியா டுநைட்' நிகழ்ச்சியில் பேசிய எம்.கே. நாராயணன், "அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்துக்களைப் பார்க்கையில், பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கும் காஷ்மீர் விவகாரத்திற்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்று அவர் கூறுவதாகவே தெரிகிறது. இது மிகுந்த கவலைக்குரியது" என்றார்.
மேலும், இதுபோன்ற கருத்துக்களை பிரச்சாரத்தின்போதுதான் ஒபாமா கூறியுள்ளார். இப்போதுதான் பதவிக்கு வந்துள்ளார். எனவே, இனி என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒபாமா தேர்தலில் போட்யிட்டபோதோ அல்லது அவர் பதவியேற்ற பிறகோ ஒபாமாவின் நிர்வாகத்துடன் நாம் இன்னும் பெரிய அளவிலான தொடர்புகளை மேற்கொள்ளவில்லை.
ஒருவேளை பதவிக்கு வந்த பிறகும் ஒபாமா அதே கருத்தில் இருப்பாரானால் அது தவறானது. இதை நாம் அவருக்குச் சுட்டிக்காட்டுவோம் என்றும் நாராயணன் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 02 Feb 2009 (20:14 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (20:14 IST)