Publish Date: Mon, 02 Feb 2009 (17:46 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (17:46 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழிக்க அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்குத் தைரியம் இல்லை என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தானிற்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்த பிரணாப் முகர்ஜியின் எண்ணமும், அவரின் அணுகுமுறையும் சரியானதுதான். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களை சில ராக்கெட்டுகளை ஏவித் தகர்ப்பதற்கு அவருக்கு இன்னும் தைரியம் வேண்டும் என்றார்.
கடந்த 1971இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் இருந்த தைரியமும், உறுதியும் பிரணாப் முகர்ஜியிடமும் இருக்க வேண்டும். அப்படியானால், அவர்தான் இந்திரா காந்தியின் வாரிசு என்று தேசம் ஏற்றுக்கொள்ளும். நாங்களும் கூட அவரின் ஆதரவாளர்களாக மாறுவோம் என்றார் தொகாடியா.
Webdunia
Publish Date: Mon, 02 Feb 2009 (17:46 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (17:46 IST)