Publish Date: Mon, 02 Feb 2009 (17:41 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (17:41 IST)
கோவாவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவருக்கு மட்டும் 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விமானக் கடத்தல் தொடர்பாக நேற்று ஜித்தேந்தர் குமார் மொஹல்லா, சமீர் உப்பால், ஹர்பீத் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் சமீர் உப்பால், ஹர்பீத் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஜிதேந்திரக் குமார் மது அருந்தியிருந்தாரா என்று சோதனை நடத்தினர். அதன் பின்னர் அவர் டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.