Publish Date: Mon, 02 Feb 2009 (12:54 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (12:54 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கடுங்குளிர் நேற்று மீண்டும் வாட்டத் தொடங்கியுள்ளது.
டெல்லியில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இது இயல்பைக் காட்டிலும் ஒரு டிகிரி செல்சியஸ் குறைவு என்றும், கடுமையான பனிக்காற்று வீசியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
என்றாலும் வெளிச்சம் போதிய அளவுக்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும், 7 டிகிரி செல்சியஸுக்கும் குறைந்த வெப்பநிலை பதிவாகலாம் என்றும் புதுடெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.