ஜார்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுவது அந்த மாநில அரசியல் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜார்கண்டில் கடந்த ஜனவரி 8இல் நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் சிபுசோரன் தோற்றார். இதனால் அவர் ஜனவரி 12இல் தனது பதவியை விட்டு விலகினார். அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சட்டப் பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ராஞ்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம், ஜார்கண்டில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, அது அந்த மாநில அரசியல் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது என்று கூறினார்.