Publish Date: Sat, 31 Jan 2009 (14:24 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (14:24 IST)
புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர் நடத்தும் நான்கு மாடி விடுதி மீது 8 பேர் கொண்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர் நடத்தும் ஆதிதி என்ற நான்கு மாடி விடுதி மீது இன்று அதிகாலை 2.00 மணியளவில் இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது.
இதில் விடுதியின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. விடுதிக்குக் காவலிருந்த காவல்துறை காவலர்கள் செந்தில் குமார், நாராயணசாமி ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்திய கும்பலை விரட்டிப் பிடிக்க முயன்றனர். இதில் செல்வம் என்பவர் பிடிபட்டார்.
அவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் காவலர்கள் செந்தில் குமாரும், நாராயணசாமியும் காயமடைந்துள்ளதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.