Publish Date: Sat, 31 Jan 2009 (13:52 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (13:49 IST)
இலங்கையில் சிறிலங்க இராணுவத்தினர் நடத்தும் தாக்குதலில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு, இலங்கையில் போரை நிறுத்த சிறிலங்க அரசை வலியுறுத்தி அப்பாவித் தமிழ் மக்களைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தீக்குளித்து மரணமடைந்த பத்திரிக்கையாளர் கே. முத்துகுமாருக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Webdunia
Publish Date: Sat, 31 Jan 2009 (13:52 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (13:49 IST)