Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாட்டியாலா மருத்துவமனையில் தீ: 5 குழந்தைகள் பலி

பாட்டியாலா மருத்துவமனையில் தீ: 5 குழந்தைகள் பலி
, சனி, 31 ஜனவரி 2009 (12:28 IST)
பாஞ்சாப்பின் பாட்டியாலா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்து சில நாட்களே ஆன 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் குர்மித் சிங் கூறுகையில், ரஜிந்த்ரா மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் குழந்தைகளை பாதுகாக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் இன்குபேட்டர் (incubator) என்ற செயற்கை பாதுகாப்பு கருவியில் வைக்கப்பட்டிருந்த 5 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் கூறினார்.

மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குர்மித் சிங் கூறினார்.

இதற்கிடையில், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 3 குழந்தைகள் எந்தவிதக் காயமும் இன்றி மீட்கப்பட்டதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil