Publish Date: Sat, 31 Jan 2009 (11:36 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (11:36 IST)
அரசியலில் சேர மாட்டேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே. அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீபா அத்வானி, பாஜகவில் தான் உறுப்பினராக இல்லை என்றும், அரசியலில் சேரும் எண்ணமும் தனக்கு இல்லை என்றும் கூறினார்.
தான் தற்போது செய்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான பணியிலேயே முழு கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனது தந்தை அத்வானியை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்றார் பிரதிபா.
Webdunia
Publish Date: Sat, 31 Jan 2009 (11:36 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (11:36 IST)