Publish Date: Thu, 29 Jan 2009 (11:01 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (11:01 IST)
அந்தமான் தீவின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.4 ஆகப் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அட்ச ரேகையில் இருந்து வடக்கே 13.7 டிகிரி, தீர்க்க ரேகையில் இருந்து 92.9 டிகிரி கிழக்கே மையம் கொண்டுள்ளது.
எனினும், இதன் காரணமாக பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.