உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனையில் பிரதமர் நடைப்பயிற்சி
Publish Date: Thu, 29 Jan 2009 (10:39 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (10:39 IST)
இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது.
நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்ட பிரதமர் இன்று காலை தனது அறையிலேயே நடைப்பயிற்சி செய்தார். மேலும் அவர் வழக்கமாக மேற்கொள்ளும் காலை நேர உடற்பயிற்சிகளை செய்ததாக பிரதமருக்கு சிகிச்சை அளித்து வரும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்ட பிரதமருக்கு புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் கடந்த சனிக்கிழமை இருதய (பை-பாஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதன் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், நாளைக்கு பிரதமர் வீடு திரும்பலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.