புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து இன்று சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இன்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாகவும், அனைத்து உயிர்காப்பு மற்றும் கண்காணிப்பு சாதனங்களும் நீக்கப்பட்ட நிலையில், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்க்கப்பட்ட நாட்களுக்குள் பிரதமர் மிகவும் விரைவாக குணம் அடைந்து வருவதாக டாக்டர் விஜய் டிசில்வா கூறினார்.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று பிரதமரின் உடல் நலம் குறித்து, அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர், நேற்று அறைக்குள்ளேயே நடைபயிற்சி மேற்கொண்டதாகவும், சாதாரண உணவு வகைகளை அவர் சாப்பிடத் தொடங்கியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.