Publish Date: Wed, 28 Jan 2009 (17:03 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (17:02 IST)
இலங்கையில் போரை நிறுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து உள்ளதைக் கண்டித்து புதுச்சேரியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சிறிலங்க அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தம் செய்யத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.