சர்வதேசச் சந்தையில் கச்சா விலை குறைந்திருப்பதை அடுத்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4, டீசல் லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது.
இன்று மாலை கூடவுள்ள பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உச்சகட்டமாக பேரல் ஒன்று 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது பேரல் ஒன்று 40 டாலராகக் குறைந்துள்ளது.
இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 என்றவாறு மத்திய அரசு குறைத்தது. இது மேலும் குறைக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.