Newsworld News National 0901 27 1090127046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் கவலைக்கிடம்

Advertiesment
குடியரசுத் தலைவர் ஆர்வெங்கட்ராமன் புதுடெல்லி
, செவ்வாய், 27 ஜனவரி 2009 (13:58 IST)
நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் ஆர்.வெங்கட்ராமன் (98) சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து ராணுவ மருத்துவமனையின் லெப்டினன்ட் ஜெனரல் மேத்யூ கூறுகையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அவரது பல்வேறு உறுப்புகள் செயலிழந்து வருவதால் உயிர்க்காப்பு உபகரணங்கள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வெங்கட்ராமனின் உடல்நிலை நிலையற்றதாக காணப்படுவதாகவும் மேத்யூ தெரிவித்தார்.

நாட்டின் 8வது குடியரசுத் தலைவராக கடந்த 1987 ஜூலை 25ஆம் தேதி பதவியேற்ற ஆர்.வெங்கட்ராமன், 1992 ஜூலை 25ஆம் தேதி வரை அப்பதவியில் இருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil