Newsworld News National 0901 27 1090127020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தின அணிவகுப்பை டி.வி-யில் பார்த்தார் பிரதமர்

Advertiesment
குடியரசு தின விழா டிவி பிரதமர் அணிவகுப்பு இதய அறுவை சிகிச்சை
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓய்வின் போது, குடியரசு தின விழா அணிவகுப்பை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து உடல் நிலை தேறி வரும் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் கொடியேற்றியதையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை பார்த்தார்.

இத்தகவலை பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தற்போது பிரதமர், திரவ உணவு அருந்துவது மாறி லேசான திட உணவு சாப்பிடத் தொடங்கியிருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

பிரதமரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil