Publish Date: Mon, 26 Jan 2009 (15:02 IST)
Updated Date: Mon, 26 Jan 2009 (15:02 IST)
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிராக்டர், லாரி மீது ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
கான்பூரில் இருந்து அலஹாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் இன்று அதிகாலை ரேபரேலி மாவட்டத்தின் உச்சஹார் ரயில் நிலையத்தை கடந்தது. அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ரயில் வருவது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக உச்சஹார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிராக்டர், லாரி ஆகியவற்றின் மீது ரயில் மோதியதாகவும், இதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 30 பேர் அறுகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.