திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவு பட இயக்குர்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதால் அது செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்குத் தடை விதித்து கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷான் கால்,"படைப்பாற்றலை இடையூறு செய்வதன் மூலம் அதிகாரிகள் பட இயக்குநர்களின் மூச்சுக்குழலை நெருக்கக் கூடாது. மத்திய அரசின் உத்தரவு பட இயக்குர்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதால் அது செல்லாது" என்று தீர்ப்பளித்தார்.