மும்பைத் தாக்குதல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் அன்சாரி, சஹாபுதீன் அஹமது ஆகிய இரண்டு பேரையும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர்கள் இருவரும் ஓபராய் நட்சத்திர விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை முகாமின் மீது கடந்த ஆண்டு நடந்த தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரையும், விசாரணைக்காக உத்தரப்பிரதேசக் காவல்துறையிடமிருந்து மும்பைக் காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர்.
லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபாஹிமும், சஹாபுதீனும் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மும்பைக்குக் கொண்டு வரப்பட்டனர்.