இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான நா. ரா. கலைநாதன், கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் மற்றொரு சட்டமன்ற உறுப்பினருமான ஆர். விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய சிறிலங்க அரசை வலியுறுத்தி அப்பாவித் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று, மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.