Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளும‌ன்ற‌ம் ‌பி‌ப்ரவ‌ரி 12ஆ‌ம் தே‌தி கூடு‌கிறது

Advertiesment
நாடாளும‌ன்ற‌ம் ‌பி‌ப்ரவ‌ரி 12ஆ‌ம் தே‌தி கூடு‌கிறது
, வியாழன், 22 ஜனவரி 2009 (20:13 IST)
த‌ற்போதைய 14ஆவதநாடாளும‌ன்ற‌‌த்‌தி‌‌ன் 15ஆவதகூ‌ட்ட‌த்தொட‌ரஅடு‌த்மாத‌ம் (‌பி‌ப்ரவ‌ரி) 12ஆ‌மதே‌தி துவ‌ங்கு‌கிறது.

முதல் நாளான 12ஆ‌மதேதியன்று, நாடாளும‌ன்ற‌த்‌தி‌னமைஅரங்கத்தில் நட‌க்கு‌மஇரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு‌ததலைவ‌ரபிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத் தொடரானது, தற்போதைய 14ஆவது நாடாளுமன்றத்தின் 15ஆவது கூட்டத் தொடர் ஆகும். இந்த கூட்டத் தொடர் 26ஆ‌மதேதி வரை இரண்டு வார காலம் நீடிக்கும். இது தொடர்பாக, மக்களவை‌ச் செயலகம், மா‌நில‌ங்களவை‌சசெயலகம் ஆகியவற்றில் இருந்து த‌னி‌த்த‌னி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற‌தேர்தல் நட‌க்க‌விருப்பதால், இதுவே 14ஆவது நாடாளுமன்றத்தின் கடைசி‌க் கூட்டத் தொடராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil