மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பணியில் இருந்த அஸ்ஸாம் ரைஃபிள் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இணை கட்டளை அதிகாரி ஒருவர் உட்பட 6 இராணுவத்தினர் பலியாகினர்.
சிங்கை காவல் நிலையப் பகுதியில் பணியிலிருந்த டி.எஸ். டாங்குல் என்ற அந்த இராணுவ வீரர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில், இணை கட்டளை அதிகாரி உட்பட 6 இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
துப்பாக்கிச்சூடு நடத்திய டாங்குல் சம்பவத்திற்கு முன்பு தன்னுடன் பணியாற்றும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு முகாமிலிருந்த சில ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.