ஜம்மு- காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டமான ராஜூரியில் தீவிரவாதிகளின் இரண்டு மறைவிடங்களில் இருந்து தலா 10 மற்றும் 15 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தை இராணுவப் படையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜூரி மாவட்டத்தில் கண்டி பிரிவில் உள்ள படால் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டறிந்த இராணுவப் படையினர், அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, ஏ.கே. துப்பாக்கி குண்டுகள் 153 சுற்றுக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதற்கு அருகில் உள்ள புதால் என்ற இடத்தில் தேடுதல் வேட்டையின்போது மற்றொரு மறைவிடத்தைக் கண்டுபிடித்த படையினர், அதிலிருந்து 15 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தையும், 6 கையெறி குண்டுகளையும் பறிமுதல் செய்தனர் என்று செய்திகள் கூறுகின்றன.