நமது நாட்டை எதிரிகள் சூழ்ந்துள்ளதால், நமது பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.
பானாஜியில் நடந்த இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நம்மிடம் போதிய நவீனத் திறன் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்மிடம் உள்ள திறனின் அளவு நமக்குத் தேவையானதில் 30 விழுக்காட்டிற்கும் குறைவானதே ஆகும் என்றார்.
இந்தியாவை ஏராளமான எதிரிகள் சூழ்ந்துள்ளதால், நமது படைகளையும் கடலோரக் காவல் படையையும் முடிந்தவரை வேகமாக நவீனப்படுத்துவது என்று மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. நமது ஆயுதப் படைகள் உறுதியாக எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.