Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருதயப் பரிசோதனை: எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் அனுமதி

Advertiesment
இருதயப் பரிசோதனை: எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் அனுமதி
, புதன், 21 ஜனவரி 2009 (11:43 IST)
தலைநகர் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதயப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் முடிவில் அவருக்கு இருதயத்தின் சில பகுதியில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட சிகிச்சை பற்றி மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைத் (எய்ம்ஸ்) தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முழு மருத்துவ பரிசோதனைக்காக பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று சென்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பை-பாஸ் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ள பிரதமருக்கு, லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால், நேற்று அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil