அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய புதிய வகை பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் அந்தோணி, இந்த சோதனை ராணுவ நடவடிக்கையின் ஒருபகுதிதான் என்றும், எந்த நாட்டை பயமுறுத்தவும் இந்த சோதனை நடத்தப்படவில்லை என்றும் விளக்கினார்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஏவுகணைத் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும், இந்தச் சோதனை ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்ததாக அந்தோணி தெரிவித்தார்.
ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை 290 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது.
கடந்த 17ஆம் தேதியை நடத்தப்படுவதாக இருந்த இந்தச் சோதனை இன்று ஒத்திவைக்கப்பட்டதற்கு ராணுவ தளவாட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை.