Publish Date: Tue, 20 Jan 2009 (13:21 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (13:21 IST)
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் 7ஆம் தேதி சவுதி அரேபியாவிற்கு 3 நாள் பயணமாகச் செல்கிறார்.
சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்லும் பிரதமர், அந்நாட்டுடன் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுகள் நடத்துவார் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கும், அரபு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.