Newsworld News National 0901 20 1090120032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ.பி: ரயில் மேற்கூரையில் பயணித்த 3 பேர் பலி

Advertiesment
ரயில் பைஸாபாத் அலஹாபாத் சர்யூ சில்பிலா
, செவ்வாய், 20 ஜனவரி 2009 (12:53 IST)
இடப்பாற்றாக்குறை காரணமாக ரயிலின் மேற்கூரையில் பயணம் செய்தவர்களில் 3 பேர் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

அலஹாபாத்தில் இருந்து பைஸாபாத் நோக்கிச் சென்ற சர்யூ ‌விரைவு ரயிலில் இடப்பற்றாக்குறை காரணமாக சுமார் 200 பேர் ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தனர்.

பைஸாபாத்தில் இருந்து 80 கி.மீ. தொலையில் சில்பிலா பகுதியில் நேற்றிரவு ரயி‌லி‌ல் பயணித்த போது, மரக்கிளை மோதியதில் மேற்கூரையில் அமர்ந்திருந்த பலர் கீழே விழுந்ததாகவும், இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் நிலைய அதிகாரி அபிமன்யூ திவேதி தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் லக்னோ, அலஹாபாத், பிரதாப்கரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பைஸாபாத்தில் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அலஹாபாத்தில் இருந்து ஏராளமானோர் சர்யூ ரயிலில் பயணித்தனர். எனினும், இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அவர்கள் ரயிலின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil