Publish Date: Mon, 19 Jan 2009 (16:35 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (16:12 IST)
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் மீது பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்று பாதுகாப்பு இணை அமைச்சர் பள்ளம் ராஜூ குற்றம்சாற்றினார்.
இதுகுறித்து புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்குத் தேவையான ஆதாரங்களை இந்தியா கொடுத்திருக்கிறது. இருந்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றார்.
பாகிஸ்தானில் பல அதிகார மையங்கள் இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவை தடையாக உள்ளன. இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பு என்றும் அமைச்சர் பள்ளம் ராஜூ குற்றம்சாற்றினார்.