Publish Date: Mon, 19 Jan 2009 (15:45 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (15:23 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மேலும் குறைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று பெட்ரோலியச் செயலர் ஆர்.எஸ்.பாண்டே தெரிவித்தார்.
நமது நாட்டின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களின் இறக்கமதி அளவு கடந்த ஆண்டு இருந்த அளவே நீடிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் அதிகரிக்கக்கூடும் என்றார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படுமா என்பது குறித்துத் தன்னால் எதுவும் கூற முடியாது என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு எடுக்கும் என்றும் பாண்டே தெரிவித்தார்.