Publish Date: Mon, 19 Jan 2009 (11:14 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (10:54 IST)
தலைநகர் புதுடெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 30 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மேலும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு முதலே கடும் பனிப்பொழிவு காணப்படுவதாகவும், இதன் காரணமாக இன்று வழக்கமான விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் டெல்லிக்கு வரவேண்டிய 23 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வருவதால் அந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.