குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் சாதனைகளைப் புகழ்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணனூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. அப்துல்லா குட்டி, அயல்நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குஜராத்தில் சிறப்பான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று புகழ்ந்து பேசினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் விளக்கமளித்துள்ள அப்துல்லா குட்டி, நரேந்திர மோடியின் மதவாதத்தை ஆதரிக்கவில்லை. அவரது வளர்ச்சி திட்டத்தைத்தான் பாராட்டினேன் என்று கூறியுள்ளா. ஆனால் இந்த விளக்கம் ஏற்கப்படவில்லை. எனவே அவர் கட்சியில் இருந்து ஒரு வருடத்துக்கு நீக்கப்பட்டுள்ளார்.