குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெடிக்காத 5 குண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர்.
அகமதாபாத்தில் உள்ள கரஞ்ச் பகுதியில் அஞ்சல் நிலையத்திற்கு அருகில் இருந்த கண்டெய்னரில், சந்தேகத்திற்கிடமான சில பொருட்கள் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்த காவலர்கள் நடத்திய சோதனையில் வெடிக்காத 5 நாட்டு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உடனடியாகச் செயலிழக்கச் செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.