இஸ்லாமிய மதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.
ஆனால் சில நேரங்களில் மதங்களின் புனித நூல்களில் இடம்பெற்றுள்ள வாசகம் மற்றும் கருத்துகளை தவறாக எடுத்துக் கொண்டு, பயங்கரவாத செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் கொல்கட்டாவில் அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
இஸ்லாமிய மதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறிய அவர், எந்த மதத்திலும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றார்.
பயங்கரவாதிகள் அனைவரும் மனித குலத்திற்கு எதிரிகள் என்றும் பிரணாப் குறிப்பிட்டார்.