சென்னை கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இஸ்ரோ உயரதிகாரி, அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) குழு இயக்குனராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணா ராவ். அவரது மனைவி சுசீல். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு சென்று தங்கள் மகனை வழியனுப்பினர்.
பின்னர் சூலூர்பேட்டையில் உள்ள தங்கள் வீட்டிற்கு இருவரும் காரில் திரும்பும் வழியில் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.