சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னால் தலைவர் ராமலிங்க ராஜூவிற்கு ஜனவரி 19 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ரூ.8,000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக ஹைதராபாத் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்துள்ள ராமலிங்க ராஜூவும், கைது செய்யப்பட்டுள்ள ராமலிங்க ராஜூவின் சகோதரர் பி.ராமராஜூ, சத்யம் நிறுவனத்தின் முன்னால் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூன்று பேரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஹைதராபாத் 5ஆவது கூடுதல் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணா, மனு மீதான விசாரணையை 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், 3 பேரின் காவலையும் 19ஆம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.