ஜம்முவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜம்முவில் நடந்த குடியரசுத் தின விழாவில் ஆளுநர் கிருஷ்ணாராவ் கொடி ஏற்றியபோது நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 60 பேர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த வாஷிம் அஹமது மாலிக் என்ற தீவிரவாதி பல ஆண்டுகளாகத் தலை மறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று கிஸ்த்வார் மாவட்டத்தில் பதுங்கிருந்தபோது வாஷிம்-ஐ பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகப் படையினர் தெரிவித்தனர்.