சபரிமலையில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் பொங்கல் தினமான புதன்கிழமையன்று மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேடு பகுதியில் ஆண்டுதோறும் இந்த நாளில், ஸ்ரீ ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவதாக பக்தர்களிடையே ஐதீகம் நிலவுகிறது.
மகரஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக சபரிமலையில் இன்று முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது.
மகரஜோதியையொட்டி சன்னிதானம், பாண்டித்தாவளம், அட்டத்தோடு, பம்பை, பெரியானை வட்டம், நீலிமலை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு பணியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மகர ஜோதி தரிசனம் முடிவடைந்ததும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.