Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2020இல் நிலவிற்கு மனிதன் - அண்ணாதுரை

2020இல் நிலவிற்கு மனிதன் - அண்ணாதுரை
, திங்கள், 12 ஜனவரி 2009 (17:29 IST)
சந்திரனுக்கு ஆளில்லா செயற்கைக் கோள் சந்திரயான்-ஒன்றை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியுள்ள நிலையில், மனிதனுடன் கூடிய செயற்கைக் கோள் வரும் 2020ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பப்படும் என்று சந்திரயான் திட்ட இயக்குனர் எம். அண்ணாதுரை கூறியிருக்கிறார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சந்திரயான் - ஒன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பதன் மூலம் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஆளுடன் கூடிய செயற்கைக்கோளை அனுப்பும் நம்பிக்கை உருவாகியிருப்பதாகக் கூறினார்.

அடுத்த 2 ஆண்டுகளில் சந்திரயான்-2 செலுத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து சந்திரயான் -3 விண்ணிற்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் அனுப்பப்பட்ட சந்திரயான் - ஒன்று அனுப்பியுள்ள தகவல்களை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவான சந்திரன் ஆராய்ச்சி மையத்தை அமைப்பது குறித்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோவுடன் பல நாடுகள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அண்ணாதுரை கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil